your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Tuesday, May 7, 2013

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?

To keep Listeners' interest alive, we introduce from today a story feature every week.
This is the First One.    

காந்திஜி , நேருஜி , ராஜாஜி , சோனியாஜி, ஆல் ஒகே . ஆனா அலர்ஜி யாரு ?
*****************************************************************************
 ஒவ்வொரு மருத்துவருக்கும் ஒரு அணுகு முறை இருக்கிறது.
 
     அந்த மருத்துவத்தில் எந்தத் துறையில் இருந்தாலுமே .....

      உங்களது குடும்ப மருத்துவரை ஒரு தொல்லைக்காக அணுகினீர்கள் என்றா ல்    அவருக்கு உங்கள் உடல் நிலை பற்றிய பழைய தகவல்களும் தெரிந்திருக்கும்.

       அதைத்தவிர உங்களது மன நிலையும் புரிந்திருக்கும்.  அதாவது எந்த ஒரு வியாதி வந்தாலும்  அதைப் பொறுத்துக்கொண்டு மருத்துவரோடு ஒத்துழைப்பீர்களா இல்லயா என்றும் அவருக்குத் தெரிந்திருக்கும்.

        சில வியாதிகள் அக்யூட் எனப்படும். அதிக தொல்லை.  உடன் நிவாரணம் இயலும்          மற்றும் சில .. க்ரானிக். தொடர்ந்து தொல்லை தரும்.  மருந்து எடுத்துக்கொண்டாலும் பொறுமையுடன்  இந்த வியாதி அல்லது நிலைமையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும்.

        நம்மில் பலருக்கு பொறுமை இல்லை. அதனால் வரும் தொல்லைகள் வியாதியின் கொடுமையைக் காட்டிலும் அதிகம்.

       மருந்து  கொடுப்பது மருத்துவன் கடமை.
.  ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள்.

        இருந்தாலும் சில சமயங்களில் நோயாளிக்கு மட்டுமல்ல வைத்தியருக்கும் பொறுமை இருப்பதில்லை. எதையாச்சும் கொடுத்து இரண்டே நாள்லே ரிசல்ட் காண்பிக்கவேண்டும் அப்படின்னு ஒரு மனப்பாங்கு. புதுசா எது வந்தாலும் அதை யாருக்கு தருவது அப்படின்னு யோசிக்கும்போது நம்ம வந்து மாடுவோம்னா அது நம்ம தலை எழுத்து

       இப்பொழுதெல்லாம் ஒரு குடும்ப மருத்துவர் என்ற கல்சரே மாறி வருகிறது.   நமக்கு நாமே இது தான் என்று   தீர்மானித்துக்கொண்டு அதற்கான ஒரு ஸ்பெஷலிஸ்ட் மருத்துவரை நாடுகிறோம்.

       அவரிடமோ கூட்டம் அதிகம்.  அவர் பணமும் சம்பாதிக்கவேண்டும்.  அதே சமயம் பெயரும் எடுக்கவேண்டும்.

:அந்த டாக்டரிடம் சென்றேன் பாருங்கள். இரண்டே நாட்களில் கம்ப்ளீட் குணமாயிட்டேன்" என்று சொல்லும் நண்பர்களும் டாக்டர்களுக்கு இருக்கிறார்கள்."
இருபது வருஷம் முன்னாடி நடந்த ஒரு விஷயம் . கதை அப்படின்னு சொல்ல முடியாது   உண்மைதான் ஆனா கொஞ்சம் அங்கங்கே கலர் அடித்து இருக்கும் கதை.
       எனது  நண்பர்.  ஒரு நாள் இரவு கல்லூரி தோட்டத்தில் பஃப்ஃபே டின்னர்  பார்ட்டிலே  கலந்துகொண்டு வீட்டுக்கு வந்தார். பத்து மணி இருக்கும்.

உடலில் ஏதோ அரிப்பது போல் இருந்தது. சொறிந்து கொண்டார்.  அரிப்பு தொடர்ந்தது.  உடம்பில் பல இடங்களில் அரிப்பு தோன்றியது.  சொறிந்தால் சிவப்பாக ஆனது.

       ஏதோ விஷக்கடி போல் இருக்கிறது. என்று நினைத்துக்கொண்டார்.  நாளை உபத்திரவம் இருந்தால் டாக்டரிடம் போகலாம் என நினைத்தார்.

        இருந்தாலும் அடுத்த இரண்டு மணி நேரம் அவரது உடல் அரிப்பு எரிச்சல் தோல் தடிப்பு எல்லாமே வீட்டுலே இருக்கறவங்களை காப்ரா படுத்தி ஆம்புலன்ஸை கூப்பிடும் அளவுக்கு போய்விட்டது.

        அம்பத்தூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு பிரபல மருத்துவ மனை .எப்பவுமே அங்கே தான் 24 அவர்சுமே ட்யூடி டாக்டர்.இருப்பாங்க

 வந்தவரை மருத்துவர் பரிசோதனை செய்ததில்   புரிந்து கொண்டார்.   ஏதோ ஒரு அலர்ஜி.

(அலர்ஜி என்றால் என்ன என்பது பற்றி இங்கே தக்க விவரம் உள்ளது )

அவர் உண்ட உணவில் இருக்கலாம். இல்லை, அவரை ஏதேனும் ஒரு மொசுக்கட்டை மாதிரி ஒரு பூச்சி கடித்து இருக்கலாம்.  ஏதேனும் கடித்த மாதிரி இருந்ததா எனக்கேட்டார். இவர் தெரியவில்லை.  நான் பார்ட்டிலே மும்முரமா
இருந்தேன்.  என்ன சாப்பிட்டீர்கள் என்றார்.  அவரோ ஒரு நாலு பக்கத்துக்கு ஒரு லிஸ்ட் தந்தார். வெஜ், நான் வெஜ், சமாசாரம் எல்லாமே அதில்.மீன் நண்டு, எல்லாமே இருந்தன

உடனடியாக ஒரு இஞ்ச்கஷன் போட்டார்.    அடுத்த 2 நிமிசத்தில் அத்தனை உபத்திரவமும்  அவுட் ஆகிவிட்டது.  கையில் ஒரு சீட்டு கொடுத்தார் இந்த மருந்தை நாளயிலிருந்து ஒரு மூன்று நாளைக்கு சாப்பிடுங்கள் என்றார்

நாளைக்கும் இதுபோலவே தீவிரமாக இருந்தால் கண்டிப்பாக வாருங்கள்
மருந்தை மறக்காமல் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்று அவர் சொன்னதை என் நண்பர் எந்த அளவில் காதில் வாங்கிகொண்டார் ?  வாங்கிக்கொண்டாரா என மருத்துவருக்கு தெரியவில்லை.

மறுநாள் காலை விடிந்தது என்றும் போல

இவரோ 100 பர் சென்ட் சரியாகத்தான் இருந்தார்  குடும்பத்தோடு அவர்கள்
எல்லோருமே அவர்கள் ஊருக்கு அன்றைய தேதியில் செல்வதாக இருந்தது
சேலத்தில் ஏதோ உறவினர் திருமணம்,

என்னங்க.. நீங்க எப்படி இருக்கீங்க..
நல்லாத்தான் இருக்கேன் அது எதோ பூச்சி கடி சுத்தமா சரியா போயிடுத்து.
இன்னிக்கு ஊருக்கு போகணுமே ... மனைவி கேட்டாள் .
நல்லாப்போலாம் ஒன்னும் பிரச்னை இல்லை என்றாராம் நண்பர்

சென்ட்ரலுக்கு போய் அங்கிருந்து சேலம் வழியாக செல்லும் ட்ரெயினில் பயணம் ஆனார்கள்.

நடு வழியில்....


(தொடரும். )

**********************************************************************************சுய புராணம்
அப்பாடி , பிட் பிட்டா  இப்படித்தான்  இனிமே கதை எழுதணும்




6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குடும்ப மருத்துவர் எது சொன்னாலும் கேட்கும் மனம்... நம்பிக்கை....!?

ஜீவி said...

//மருந்தை மறக்காமல் சாப்பிட்ட பின் சாப்பிடுங்கள் என்று... //

டாக்டர் சொன்னது ஏதோ வேதவாக்கு மாதிரி இருக்கிறதே?.. அதை மீறி விட்டாரா நண்பர்?

இராஜராஜேஸ்வரி said...

மருந்து கொடுப்பது மருத்துவன் கடமை.
. ஆரோக்கியம் தருவது ஆண்டவன் அருள்....!

அருமையான வார்த்தை ..!

Anonymous said...

ஒவ்வாமை பற்றிஅறிய ஆவலுடன்......கதை நன்கு செல்கிறது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Anonymous said...

ஒவ்வாமை பற்றிஅறிய ஆவலுடன்......கதை நன்கு செல்கிறது.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

Geetha Sambasivam said...

இரண்டாவதைப் படிச்சுட்டு இந்த முதல் பகுதியைப் படிக்கிறேன். அப்போ பார்ட்டியில் சாப்பிட்டது ஒத்துக்கலையோ?


//மருந்து எடுத்துக்கொண்டாலும் பொறுமையுடன் இந்த வியாதி அல்லது நிலைமையுடன் வாழ கற்றுக்கொள்ளவேண்டும். //

என்னைப் பொறுத்தவரையில் என் வியாதிகளோடு நான் இந்த முடிவுக்கு வந்து பல வருடங்களாகின்றன. பொறுமையுடனேயே மருந்துகளையும் எடுத்துக்கொண்டு வியாதியோடு வாழ ஆரம்பித்து விட்டேன். :)))))