your attention please....



குணம் நாடி குற்றம் நாடி அவற்றுள்
மிகை நாடி மிகக் கொளல்.”

********************************************************

THIS bilingual BLOG

IS INTENDED TO CREATE A BETTER AWARENESS OF HEALTH ISSUES AMONG PUBLIC
.

****************************************************
nothing in this blog will ever ever substitute a sincere consultation and a meaningful advice of a doctor.

********************************************************
மருந்து தருவது மருத்துவன் கடமை. ஆரோக்கியம் பெறுவது ஆண்டவன் அருள்.



Thursday, January 8, 2009

காது அடைத்திருக்கிறது.

காது அடைத்திருக்கிறது. அதில் மெழுகு அதிகம் இருக்கிறது. அதை ச்சுத்தம் செய்யுங்கள் என்று எனது வழக்கமான மருத்துவர் கூறிய அறிவுரையைத் தொடர்ந்து ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணர் (அவர் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் கூட) நேற்று முன் தினம் சென்றேன்.

அது ஒரு பெரிய மருத்துவகம். கிட்டத்தட்ட ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டல் வசதிகள் கூடியதாக இருந்தது. அதில் எல்லாவகையான பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. 24 மணி நேர எமர்ஜென்சி மருத்துவகம் என்று பலகை அறிவிக்கிறது.

உள்ளே சென்று என் பெயரைப் பதிவு செய்துகொண்டேன். எனது முறை வந்தது. மருத்துவர் அறைக்குச் சென்றேன்.
என்ன தொல்லை எனச் சொன்னவுடன் என் காதைப் பார்த்தார். ஆமாம். சுத்தப்படுத்த வேண்டும். இருப்பினும் உங்கள் மூக்கிலும் பிரச்னை இருக்கிறது என்றார். அதற்கு ஒரு எக்ஸ் ரே எடுத்துக் கொண்டு வாருங்கள் என்றார். அங்கேயே எக்ஸ் ரே பிடிக்கவும் அவரது மருத்துவ ஆலோசனைக் கட்டணத்தையும் செலுத்திவிட்டு, எக்ஸ் ரேக்காக காத்திருந்தேன். எக்ஸ் ரே பி என். எஸ் என்று சொன்னார்கள். குப்புறப்படுக்க வைத்து விட்டு, தலைக்கு மேல் கருவியை வைத்துவிட்டு எடுத்தார்கள்.

ஒரு அரை மணி நேரம் கழித்து எக்ஸ் ரே படத்தை கொடுத்தார்கள். அதை எடுத்துக் கொண்டு போய் திரும்பவும் அந்த நிபுணரிடம் காண்பித்தேன். அவர் அதைப் பார்த்துவிட்டு ஒரு ஸ்கான் எடுத்துக் கொண்டு வாருங்கள். இன்றோ அல்லது நாளையோ வாருங்கள். உங்களுக்கு மூக்கில் இருபக்கங்களிலும் அடைப்பு (ப்ளாக்) இருக்கிறது. அதற்கு சர்ஜரி தேவையா இல்லையா என்று அதைப் பார்த்தபின் சொல்கிறேன் என்றார்.

என்ன இது ! எனக்கு இந்த சளி தொந்தரவை த்தவிர்த்து அதுவும் இந்த குளிர் காலத்தில் இருப்பது தான். வேறு எதுவும் இந்த 66 வயதில் வரவில்லையே ! எதற்கு ஸ்கான் ? என்ன வியாதியாக இருக்கும் ? ஆபரேஷன் என்று சொல்கிறாரே ! அது இந்த வயதில் முடியுமா ? இதை ச் செய்து தான் ஆக வேண்டுமா ?

ஸ்கானுக்கு எத்தனை செலவாகும் எனக் கேட்டேன். 2500 ரூபாய் என்றார்கள்.

அதற்கு இந்த சளியை அவ்வப்போது சிந்தி எறிவதற்கு டிஷ்யூ பேப்பர் ஒரு 1000000 வாங்கிவிடலாமே என நினைத்தேன்.

எதற்கும் எனது வழக்கமான ஆலோசனை மருத்துவரைச் சந்தித்து அவரது அறிவுரைதனை ப் பெறலாம் என்று சென்றேன்.

அவரிடம் அந்த எக்ஸ் ரே யைக் காண்பித்தேன்.

சளி பிடித்திருக்கிறது. அவ்வளவு தான். என்றார். ஸ்கான் என்று இழுத்தேன். சிரித்தார்.
சிரிக்கிறார்.

மருத்துவத் தொழிலில் transparency என்பது விட்டுப்போய் பலகாலம் ஆயிற்று .

சளி பிடித்திருக்கிறது. அதோடு கூட எனக்கு சனியும் பிடித்திருக்கிறது என்று நினைத்து க்கொண்டு வீடு திரும்பினேன்.

சனி ஆயுஷ்காரகன். இப்போது கோசரத்தில் சனி சிம்மத்திலும் ராகு மகரத்திலும் இருக்கிறார்கள். ஒன்றுக்கொன்று
ஆறுக்கு எட்டு. ( ஷஷ்டாஷ்டகம் ) அதனால்தான் இப்படி படுத்துகிறதோ என்று நினைத்துக் கொண்டு திரும்பினேன்.

வலை அன்பர் திரு சுப்பையா அவர்களிடம் கேட்கவேண்டும்.

No comments: